மார்த்தாண்டம், டிச. 4: மார்த்தாண்டத்தில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் ஜங்ஷனில் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக சட்டத்துடன் வந்த பைக்கை சோதனை செய்தனர். அதில் அதிக சத்தம் வருவதற்காக வித்தியாசமான சைலன்சர் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடர் சோதனையில் ஹெல்மெட் மற்றும் லைசன்ஸ் இல்லாமல் வந்த பைக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
The post மார்த்தாண்டத்தில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய பைக் பறிமுதல் appeared first on Dinakaran.