நித்திரவிளை, டிச.4: நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியில் புனித தாமஸ் கம்யூனிட்டி ஹால் உள்ளது. இந்த ஹாலில் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டு உள்ளது. உடனே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது கம்யூனிட்டி ஹாலின் மின் அறையில் தீ எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்து உள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து சிறிது நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக கம்யூனிட்டி ஹாலில் இருந்த மீட்டர்கள் எரிந்து, தீ பிடித்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். தீ பிடித்ததில் மின் மீட்டர்கள் அனைத்தும் நாசமாயின. வேறு சேதங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post நித்திரவிளை அருகே நள்ளிரவில் தீ விபத்து appeared first on Dinakaran.