×

நூலக நல்லுறவு என்ற தலைப்பில் சர்வதேச நூலக உச்சி மாநாடு பிப்.5ல் டெல்லியில் தொடக்கம்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: நூலக நல்லுறவு என்ற தலைப்பில் ‘சர்வதேச நூலக உச்சி மாநாடு’ அடுத்தாண்டு பிப்.5ம் தேதி டெல்லியில் நடக்கிறது. ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து, சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நூலக மற்றும் தகவல் அறிவியல் கழக தலைவர் (பெங்களூரு) ராஜேந்திர குமார் கூறியதாவது: சர்வதேச நாடுகளுக்கு இடையே நூலக கூட்டுறவு, தகவல் பரிமாற்றம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் முதல் முறையாக அடுத்தாண்டு பிப்ரவரி 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நூலக நல்லுறவு என்ற தலைப்பில் ‘சர்வதேச நூலக உச்சி மாநாடு’ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டை டெல்லியில் உள்ள தெற்கு ஆசிய பல்கலைக்கழகம், பெங்களூருவின் நூலக மற்றும் தகவல் அறிவியல் கழகம் இணைந்து டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்திலும், தெற்கு ஆசிய பல்கலைக்கழக வளாகத்திலும் நடத்த உள்ளனர்.  தொடக்க விழாவில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

அதேபோல், உச்ச மாநாட்டின் முன்னோட்ட நிகழ்வுகள் சென்னையில் டிச.4 (இன்று) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக சிற்றரங்கத்தில் மதராஸ் நூலக சங்கத்தின் முன்னெடுப்பில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு தெற்கு ஆசிய பல்கலைக்கழக தலைவர் அகர்வால் தலைமை வகிக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

சர்வதேச நூலக உச்சி மாநாட்டை முன்னின்று நடத்தும் தெற்காசிய பல்கலைக்கழகம் சார்க் நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவானதாகும். அந்த வகையில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் 2010ம் ஆண்டு தெற்காசிய பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

The post நூலக நல்லுறவு என்ற தலைப்பில் சர்வதேச நூலக உச்சி மாநாடு பிப்.5ல் டெல்லியில் தொடக்கம்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : International Library Summit on Library Relations ,Delhi ,Union Minister ,Jaisankar ,Chennai ,International Library Summit' ,Library Relations ,Union Foreign Minister ,Library and Information Sciences Association ,Sepakkam ,Journalism Forum ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்