×

மூழ்கிய தரைப்பாலத்தால் மக்கள் அவதி: உயர்த்தி அமைக்க கோரிக்கை

ஆர்.கே.பேட்டை: கனமழை பெய்ததால் செல்லாத்தூர் ஏரி முழுவதும் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் மடுகூர் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள செல்லாத்தூர் ஏரி சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், செல்லாத்தூர் ஏரி முழுவதும் நிரம்பி, உபரிநீர் வெளியேறி, தரைப்பாலத்தின் மேல் இடுப்பு அளவிற்கு தண்ணீர் செல்கிறது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் இந்த பாலத்தை தாண்டிதான் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் ஆர்.கே.பேட்டையில் இருந்து மடுகூர், அம்மனேரி, வெள்ளாத்தூர் இருளர் காலனி, கொண்டாபுரம், பரவத்தூர், வெங்குபட்டு, ஆதிபராகபுரம், சோளிங்கர் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், 10 கிராம மக்கள் இந்த தரைப்பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டி இருக்கின்றது. எனவே, இந்த தரைப்பாலத்தை உயர்த்தி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மூழ்கிய தரைப்பாலத்தால் மக்கள் அவதி: உயர்த்தி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : RK Pettah ,Selathur lake ,Madugur ,Sellathur Lake ,RK Pettah Union ,Thiruvallur ,Benjal ,Dinakaran ,
× RELATED ஆர்.கே பேட்டை ஒன்றியத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு ஆலோசனை