×

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க காவல்துறை நடவடிக்கை

 

கோபி,டிச.3: கோபி அருகே கடத்தூர் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிய ஆவணங்களை காண்பித்து எடுத்து செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது.கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன விபத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்விற்கு கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், மது அருந்தி வாகனம் ஓட்டியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலையத்தில் உள்ளது.

இந்த வானங்களின் உரிமையாளர்கள் வாகன பதிவு புத்தகம்(ஆர்.சி.புத்தக நகல்) ஆதார்கார்டு நகலை காவல் நிலையத்தில் ஒப்படைத்து வாகனங்களை எடுத்து செல்லலாம் என்று மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட பைக் மற்றும் கார்களின் உரிமையாளர்கள் உடனடியாக சான்றுகளை ஒப்படைத்து வாகனங்களை எடுத்து செல்லுமாறு கடத்தூர் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

The post பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Gobi ,Gaddur police station ,Gaddur ,station ,Dinakaran ,
× RELATED கோபி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது