செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர பகுதியில் ஜிஎஸ்டி சாலை அருகில் அமைந்துள்ள பழைய திருமலை தியேட்டர் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்தநிலையில், நேற்று காலை திடீரென தியேட்டரில் இருந்து கரும்புகையிடன் மின்சார வயர்கள் கருகும் துர்நாற்றம் வீசியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தீயணைப்புத் துறையினர் உள்ளே சென்று பார்த்போது புகை வெளியே செல்லமுடியாத நிலையில் இருந்தது. இதனையடுத்து, இரும்பு கதவுகளை உடைத்து புகையை வெளியேற்றி தீயை அணைத்தனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த திரையரங்கம் பயன்பாட்டில் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாராமாக மாறி வருகிறது. மேலும், அதிகளவில் கழிவு நீரும், பன்றிகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றி திரிவதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
The post செங்கையில் பயன்பாட்டில் இல்லாத தியேட்டரில் தீவிபத்து appeared first on Dinakaran.