×

சென்னை, செங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஒரேநாளில் 136 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஒரேநாளில் 136 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையை மிரட்டிய பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது. கனமழை காரணமாக ஏரி, குளம் குட்டைகளில் நீர் நிரம்பி வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவுகளில் நேற்று காலை நிலவரப்படி 47 சதவீதத்திலிருந்து 54 சதவீதமாக உயர்ந்துள்ளது. மழையின் காரணமாக கூடுதலாக 750 மில்லியன் கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் மொத்தம் உள்ள 1644 ஏரிகளில் நேற்று ஒரே நாளில் 141 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியது. அதன்படி இன்று காலை நிலவரப் படி ஒரேநாளில் 136 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. அதன்படி தற்போது 4 மாவட்டங்களில் 277 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை, செங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஒரேநாளில் 136 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Senkai ,Water Resources Department ,Chengalpattu ,Cyclone Benjal ,Puducherry ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள்...