×

மாநில ஜூடோ போட்டி பழநி அரசு பள்ளி மாணவர்கள் தகுதி

பழநி: திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவில் கடந்த நவ.25ம் தேதி ஜூடோ போட்டிகள் நடந்தது. இதில் வயதின் அடிப்படையில் மாணவர், மாணவியர் என தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பழநி அருகே கணக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 15 மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர். இதில் மாணவிகள் பனிமலர், கலை பொன்மதி, தாரணி பிரியா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

இவர்கள் வரும் ஜனவரி மாதம் கன்னியாகுமரியில் நடைபெறும் மாநில அளவிலான ஜூடோபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். எஞ்சிய 12 மாணவ- மாணவியர் பல்வேறு பரிவுகளில் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவியரை பள்ளியின் தலைமையாசிரியை சண்முகப்பிரியா, உடற்கல்வி ஆசிரியர் சந்திரக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

 

The post மாநில ஜூடோ போட்டி பழநி அரசு பள்ளி மாணவர்கள் தகுதி appeared first on Dinakaran.

Tags : Palani Government School ,Palani ,Dindigul Revenue District ,Government High School ,Competition ,Dinakaran ,
× RELATED இடைத்தரகர்களை நாடாமல் விவசாயிகள்...