×

ஜனாதிபதி முர்மு டெல்லி சென்றார்


ஊட்டி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக கடந்த 27ம் தேதி டெல்லியில் இருந்து ஊட்டி வந்தார். 28ம் தேதி குன்னூர் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். நேற்று மாலை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் வசிக்க கூடிய தோடர், கோத்தர் உள்ளிட்ட 6 வகை பழங்குடியின மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில், இன்று திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதாக இருந்தது. பெஞ்சல் புயல் காரணமாக அங்கு கனமழை பெய்து வருவதால், குடியரசு தலைவரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் கோவையில் இருந்து டெல்லிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

The post ஜனாதிபதி முர்மு டெல்லி சென்றார் appeared first on Dinakaran.

Tags : President ,Murmu ,Delhi ,Ooty ,Drabupati Murmu ,Army Officers Training College ,Wellington ,Coonoor ,
× RELATED 1971 போரில் இந்தியாவிற்கு வெற்றியை...