டெல்லி: 1971 போரில் இந்தியாவிற்கு வெற்றியை தேடிதந்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வீர வணக்கத்தை தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களின் தியாகம், அர்ப்பணிப்பு நம்மை ஊக்குவிக்கும். துணிச்சலான வீரர்களின் தியாகத்தை நமது தேசம் நினைவுகூரும் என்று குடியரசுத் தலைவர் பதிவிட்டுள்ளார்.
ராணுவ வீரர்களின் தியாகங்களை போற்றி மதிக்கிறோம் என்று போர் வெற்றி தினத்தையொட்டி மோடி பதிவிட்டுள்ளார். ராணுவ வீரர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு நமது தேசத்திற்கு பெருமை சேர்த்தது. ராணுவ வீரர்களின் தியாகங்கள் இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும். 1971 போரில் இந்தியாவின் வெற்றி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு மோடி புகழாரம்
The post 1971 போரில் இந்தியாவிற்கு வெற்றியை தேடிதந்த வீரர்களுக்கு வீரவணக்கம்: குடியரசுத் தலைவர், பிரதமர் புகழாரம் appeared first on Dinakaran.