×

வங்கக் கடலில் உள்ள புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் : பிரதீப் ஜான்

சென்னை : வங்கக் கடலில் உள்ள புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் போது, நள்ளிரவில் பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “புயல் கரையை நெருங்க தாமதமாக, தாமதமாக சென்னை, அண்டை மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். மரக்காணம் – மாமல்லபுரம் இடையே புயல் கரையைக் கடக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை காலை 8.30 மணி வரை கனமழை பெய்யும்;,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வங்கக் கடலில் உள்ள புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் : பிரதீப் ஜான் appeared first on Dinakaran.

Tags : Bank Sea ,Pradeep John ,Chennai ,
× RELATED சென்னையில் இன்றைய நாளின்...