×

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

 

பல்லடம், நவ.30: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் வழக்கறிஞர் குமார் தலைமையில் மன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு துணைத்தலைவர் அபிராமி அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பொங்கலூர் ஒன்றியம் திருமலைநாயக்கன்பாளையம், வெள்ளநத்தம், ராமே கவுண்டம்பாளையம், துத்தாரிபாளையம் ஆகிய ஊர்களில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்து பல ஆண்டுகளாக வீடு கட்டி அதே இடத்தில் வசித்து வரும் மக்களுக்கு தனி நபர் பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post பொங்கலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pongalur Panchayat Union Committee ,Palladam ,Advocate Kumar ,vice president ,Abirami Asokan ,Vijayakumar ,Pongalur panchayat union committee meeting ,Dinakaran ,
× RELATED பல்லடத்தில் நாளை கடையடைப்பு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு