×

புத்தகத் திருவிழா கண்காட்சி

 

மதுரை, நவ. 30: மதுரை நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கிளை நூலகத்தில் 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் மாநகர ஆயுதப்படை கிளை நூலகம் உள்ளிட்டவைகள் இணைந்து 39வது தேசிய புத்தக திருவிழா புத்தகக் கண்காட்சியை நடத்தியது. போலீஸ் கமிஷனர் லோகநாதன் திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். துணை கமிஷனர் தலைமையிடம் ராஜேஸ்வரி, மதுரை மாவட்ட நூலக அலுவலர் பால சரஸ்வதி தலைமையேற்க, ஆயுதப்படை கிளை நூலகர் மாரியம்மாள் வரவேற்றார்.

இந்நிகழ்வில் ஆயுதப் படை குடியிருப்பின் வாசகர் வட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், தமிழ்நாடு கலை இலக்கிய பெரும் மன்றத்தின் மாவட்ட தலைவர் கவிஞர் செல்லா, துணைத் தலைவர் கவிஞர் பேனா மனோகரன், தொழிலாளர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் கலைச்செல்வம் வாழ்த்துரை வழங்கினர். வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் அக்ரி காளியப்பன் நன்றி கூறினார். ஆயுதப்படை உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

The post புத்தகத் திருவிழா கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Book Festival Exhibition ,Madurai ,57th National Library Week Ceremony ,Tamil Nadu Government Public Library Department District Library Commission ,Municipal Armed Forces Branch Library ,Dinakaran ,
× RELATED மாடுகள் சாலைகளில் திரிந்தால் பறிமுதல்: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு