- வளவன் வடிகால் ஆறு
- முப்பதாராப்பூண்டி
- வளவன் வடிகால் ஆறு
- பிச்சன்கோட்டகம் கிராமம்
- கடிமேடு
- திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்
- நீர்வளத் துறை
- மதியழகன்
திருத்துறைப்பூண்டி, நவ. 30: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு, பிச்சன்கோட்டகம் கிராமத்தில் செல்லும் வளவன் வடிகால் ஆற்றில் நீர் வளத்துறை மூலம் மண்டி வெங்காய தாமரை அகற்றும் பணி நடைபெற்றது. நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் மதியழகன், உதவி பொறியாளர் குமார், வேளாண்மை துறை உதவி இயக்குநர் (பொ) செந்தில், துணை வேளாண் துறை அலுவலர் ரவி, வேளாண்மை உதவி அலுவலர் மகேஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விவசாயிகளின் நிலையை அறிந்து செயல்படும் விவசாயத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
The post வளவன் வடிகால் ஆற்றில் வெங்காய தாமரை அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.