×

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் வேலூர் அண்ணாசாலையில்

வேலூர், நவ.30: வேலூர் அண்ணாசாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். வேலூர் அண்ணாசாலையில் பழைய மீன் மார்க்கெட் அருகே சாலையை ஆக்கிரத்து வாகனங்களிலும், தள்ளுவண்டிகளிலும் பழக்கடைகள், காய்கறி கடைகள், பானிபூரி கடைகள் உட்பட பல்வேறு கடைகள் வைத்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. அதன்படி நேற்று மாநகராட்சி நகர அமைப்பு அலுவலர் தாமோதரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று கடைகளை அகற்ற கூறினர். சில கடைக்காரர்கள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

The post ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் வேலூர் அண்ணாசாலையில் appeared first on Dinakaran.

Tags : Vellore Annasalai ,Vellore ,Dinakaran ,
× RELATED சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை...