×

ஏஐசிடிஇ.யின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

சென்னை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல் ஆகிய படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதியான மாணவர்களுக்கு 2 ஆண்டுக்கு மாதந்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்படும். கடந்த செப்டம்பர் 2ல் தொடங்கியவிண்ணப்பப் பதிவு கால அவகாசம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://-pgscholarship.aicte-india.org/ என்ற வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 15ம் தேதிக்குள் சரிபார்த்து உறுதிசெய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

The post ஏஐசிடிஇ.யின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் appeared first on Dinakaran.

Tags : AICTE ,CHENNAI ,CEET ,All India Council for Technical Education ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் அறிவுத்திறனே...