×

காற்றழுத்தம் வலுவிழந்தது தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலையில் வலுவிழந்தது. இதையடுத்து, தமிழகத்தில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் இறுதி வரையில் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாகி அது புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, சில காற்றழுத்தங்கள் வலுவிழந்து போய்விட்டன. ஒரே ஒரு காற்றழுத்தம் மட்டும் பெஞ்சல் புயலாக வலுப்பெற்று தமிழக கடலோரத்துக்கு வந்த மழை கொடுத்தது.

அதற்கு பிறகு உருவான காற்றழுத்தங்கள் எதிர்திசைக் காற்றின் காரணமாக வலுப்பெறாமல் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே கடலில் நிலை கொண்டு பலத்த மழையை கொடுத்துச் சென்றுள்ளன. கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக் மிக நெருங்கி வந்து புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடலில் வெப்பம் மற்றும் நீரோட்டங்கள் காரணமாக புயலாக வலுப்பெறாமலே தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து பின்னர் ஒரு அரைவட்டமிட்டு மீண்டும் தமிழகத்துக்கு திரும்பியது. இதனால் தமிழகத்தில் நேற்று கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்தது.

The post காற்றழுத்தம் வலுவிழந்தது தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,North East ,
× RELATED காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக...