×

450 புகையிலை பாக்கெட் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது

 

விருதுநகர், நவ. 29: .விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தில் டிஎஸ்பி தனிப்படை போலீஸ் எஸ்.ஐ மாரீஸ்வரன் தலைமையில் போலீசார் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த பைக்கை நிறுத்தி அதிலிருந்த மூட்டையை சோதனையை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 450 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, பைக் மற்றும் 450 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்த சந்திரிகிரிபுரத்தை சேர்ந்த புளிராஜ் (23), கங்காதரன் (32), சரவணன் (31) ஆகிய 3 பேரை்யும் பிடித்து ஆமத்தூர் போலீசில்
ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

The post 450 புகையிலை பாக்கெட் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,S.I. Mariswaran ,DSP Special Force Police ,Chandrakiripuram ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால்...