- அமத்தூர் கிராமம்
- விருதுநகர்
- அமத்தூர் வெங்கடேசபுரம்
- மேற்பார்வை சேவைகளின் உதவி இயக்குநரின் அலுவலகம்
- விருதுநகர் கலெக்டர் அலுவலகம்
- மனு
- 8வது வார்டு வெங்கடேசபுரம் காலனி தெ
- அமத்தூர் உராடச்சி தெரு
- அம்மத்தூர்
- தின மலர்
விருதுநகர், டிச. 27: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆமத்தூர் வெங்கடேசபுரம் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், குடியிருப்புவாசிகள் மனு அளித்தனர். மனுவில், ஆமத்தூர் ஊராட்சி 8வது வார்டு வெங்கடேசபுரம் காலனி தெரு, அரசுப்பள்ளி தெருவில் கடந்த 20 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
கழிவுநீர் வாறுகால், குடிநீர், தெரு விளக்கு, சிமிண்ட் ரோடு அமைத்து தரும்படி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் 3 முறை தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம். ஆனால், இதுவரை ஊராட்சி நிர்வாகம் பணிகள் எதுவும் செய்யவில்லை. மழைக்காலங்களில் தெருக்களில் கழிவுநீர் சாலைகளில் ஓடி தொற்று நோய் பரவும் நிலை தொடர்கிறது. உரிய உத்தரவிட்டு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
The post அடிப்படை வசதிகள் கோரி ஆமத்தூர் கிராம மக்கள் மனு appeared first on Dinakaran.