விருதுநகர், டிச.25: கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை கலெக்டர் வழங்கினார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறப்பாக செயலாற்றிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ராதாகிருஷ்ணன் முதல்பரிசு ரூ.10 ஆயிரம், ராஜபாளையம் ராம்கணேஷ் 2ம் பரிசு ரூ.5 ஆயிரம், விருதுநகர் பன்னீர் 3ம் பரிசு ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையாக பெற்றனர்.
சிறப்பாக செயலாற்றிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்க செயலாளர் சிவனான் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், கோபாலபுரம் சங்க செயலாளர் ரவிக்குமார் 2ம் பரிசு ரூ.5 ஆயிரம், திருச்சுழி சங்க செயலாளர் ஜெயச்சந்திரன் 3ம் பரிசு ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.36 ஆயிரம் ஊக்கத்தொகை காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
The post கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால் வழங்கியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு appeared first on Dinakaran.