×

திருப்பூர் மாநகரில் பணியாற்றிய 8 போலீசார் பணியிட மாற்றம்

 

திருப்பூர், நவ.29: திருப்பூர் மாநகரில் பணியாற்றும் 8 போலீசாரை பணியிட மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சுரேஷ்குமார் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய கணேஷ்பாபு கொங்கு நகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மீனாட்சிசுந்தரம் கட்டுபாட்டு அறைக்கும், நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய பிரபு கட்டுபாட்டு அறைக்கும், வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பிரபாகரன் நுண்ணறிவு பிரிவுக்கும், கட்டுபாட்டு அறையில் இருந்த முருகன் தற்காலிகமாக ஆயுதப்படைக்கும், மத்திய போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய விஜயகுமார், ராஜசேகர் ஆகியோர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post திருப்பூர் மாநகரில் பணியாற்றிய 8 போலீசார் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur Managar ,Tiruppur ,Lakshmi ,Tiruppur Municipal ,Sureshkumar South Police Station ,Thirumurukanpundi Police Station ,Ganeshbabu ,South Police Station ,Dinakaran ,
× RELATED அனைத்து வணிக நிறுவனங்களில் தமிழில்...