×

பைக்கில் லிப்ட் கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் சிக்கினர்

 

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே. தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் பைக்கில் லிப்ட் கேட்பதுபோல் நடித்து வழிப்பறி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அருகே, கடம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அபிஷேக் (33). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் வேலை சம்பந்தமாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள முக்கரம்பாக்கம் கிராமத்திற்கு பைக்கில் சென்றார். அப்போது, தொட்டாரெட்டி குப்பத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் அபிஷேக்கிடம் பைக்கில் லிப்ட் கேட்டுள்ளார். அபிஷேக் லிப்ட் கொடுக்கவே, பாலச்சந்தர் பைக்கில் ஏறியுள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் பைக்கை நிறுத்தும்படியும், எனது நண்பர் ராஜேஷ் என்பவர் நிற்கிறார் எனவும் கூறியுள்ளார்.

இதை கேட்ட அபிஷேக் என்னுடைய பைக்கில் 3 பேர் செல்ல முடியாது என கூறியுள்ளார். ஆனால் பாலச்சந்தர் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் அபிஷேக்கிடம் தகராறு செய்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து, அபிஷேக் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ பிரசன்ன வரதன் வழக்குப்பதிந்து பாலச்சந்தர் (28), ராஜேஷ் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

The post பைக்கில் லிப்ட் கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Abhishek ,Kadambathur ,Tiruvallur ,
× RELATED காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு...