×

காயல்பட்டினத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஆறுமுகநேரி, நவ. 29: காயல்பட்டினம் பரிமார் தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்ஐ வாசுதேவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் 110 கிராம் கஞ்சா, 20 ஜிப்லாக் கவர்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர், காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்த சிந்தா மதார் சாகிப் மகன் முகமது அனிபா (27) என்பதும், மதுரையில் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து கஞ்சா வாங்கி விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்கு பதிந்து முகமது அனிபாவை கைது செய்து வை. சிறையில் அடைத்தார். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post காயல்பட்டினத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kayalpatnam ,Arumuganeri ,Parimar Street, Kayalpatnam ,SI Vasudevan ,
× RELATED ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதியில் கலங்கலான குடிநீர் விநியோகம்