- எடப்பாடி பழனிசாமி
- யூனியன் அரசு
- அமைச்சர்
- கே.என் நேரு
- சென்னை
- நகராட்சி நிர்வாகம்
- அஇஅதிமுக
- திருப்பூர் நகராட்சி
- சபை
- அமைச்சர் கே.என்.நேரு
சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சொத்துவரி திருத்த தீர்மானத்திற்கு எதிராய் அதிமுக போராட்ட நாடகத்தை நடத்தி உள்ளது. மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரியினை ஆண்டுதோறும் உயர்த்தியே ஆக வேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதித்தபோது வாய் மூடி அமைதியாய் இருந்த பழனிசாமி இன்று திடீரென மக்கள் மீது அக்கறை கொண்டவராய் வேடம் போடுவது வேடிக்கை.
ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2022-2023ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு “ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும்” என நிபந்தனைகளை விதித்துள்ளது’. ஒன்றிய அரசு இப்படி கடுமையான விதிகளை 15வது நிதியாணையத்தின் மூலம் விதித்தபோது அவர்களோடு நட்புறவில் இருந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.
தற்போது தமிழ்நாடு அரசு தான் சொத்து வரி உயர்வுக்கு காரணம் என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. அதேநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏழை எளிய மக்கள் பாதிக்காத வண்ணம் மிக மிக குறைந்த அளவு சொத்து வரியை உயர்த்த உத்தரவிட்டார். பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சொத்து வரியானது மிக மிக குறைந்தளவே விதிக்கப்பட்டு வருகிறது.
The post ஒன்றிய அரசின் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டு சொத்துவரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் கே.என்.நேரு கடும் தாக்கு appeared first on Dinakaran.