×

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜனவரி மாதம் கலந்தாய்வு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணியில் காலியாக உள்ள கிராம நிரவாக அலுவலர் உள்ளிட்ட 9,491 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி நடத்தியது. இத்தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள், கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மதிப்பெண்கள், ஒட்டு மொத்த தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில், கணினி வழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வானவர்கள் பட்டியலை கடந்த 7ம் தேதி டி.என்.பி.எஸ்.சி.வெளியிட்டது. அதனடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் தங்களின் சான்றிழ்களை பதிவேற்றம் செய்தனர். இந்த நிலையில் குரூப் 4 தேர்வுகளுக்கான கலந்தாய்வு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி, ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜனவரி மாதம் கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : TNPSC Group 4 ,Chennai ,TNPSC ,Dinakaran ,
× RELATED குரூப்2, குரூப் 2ஏ தேர்வு மெயின் தேர்வு...