×

அண்ணா பல்கலை. ஏற்பாடு பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆன்லைனில் பணி மேம்பாட்டு பயிற்சி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவு மே்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு தொடர்பான பணி மேம்பாட்டுப் பயிற்சியை பேராசிரியர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஆன்லைனில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வத்வாணி ஃபவுண்டேஷனுடன் இணைந்து நடத்தப்படும் இந்த பயிற்சி டிசம்பர் 4ம் தேதி தொடங்கி 17ம் தேதி முடிவடையும். ஆன்லைன் வகுப்புகள் தினமும் 3 மணி நேரம் நடத்தப்படும். இதில் சேர விரும்பும் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் டிசம்பர் 2ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.auced.com) விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அண்ணா பல்கலை. ஏற்பாடு பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆன்லைனில் பணி மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Anna University Entrepreneurship Development Center ,Vadwani Foundation ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...