×

சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை தவிர பிரிந்து சென்றவர்களை சேர்ப்பது குறித்து எடப்பாடிதான் முடிவு செய்வார்: – ஜெயகுமார் பேட்டி

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் வரும் டிசம்பர் 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து நினைவுதினத்தன்று பேரணி செல்ல முன் அனுமதி கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதன்பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் யாரும் பிரிந்து செல்லவில்லை. பொதுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. சசிகலா, ஓபிஎஸ், டிடிவி மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களை தவிர மற்றவர்களை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.

The post சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை தவிர பிரிந்து சென்றவர்களை சேர்ப்பது குறித்து எடப்பாடிதான் முடிவு செய்வார்: – ஜெயகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Sasikala ,DTV ,Jayakumar ,Chennai ,Former ,Chief Minister ,Jayalalithaa ,AIADMK ,minister ,Chennai Metropolitan Police Commissioner ,Memorial Day ,OPS ,
× RELATED எடப்பாடி பற்றி கேள்வி: சசிகலா சிரிப்பு