வாணியம்பாடி: நாதக செயலாளர், தலைவர் உட்பட 30 பேர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினர். அவர்கள் சீமானின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பாடுகள் மீது குற்றம் சாட்டி அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடியிலும் நேற்று நிர்வாகிகள் விலகியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர நாதக செயலாளர் ராஜ்குமார். நகர தலைவர் பரத் உட்பட 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து நேற்று காலை திடீரென விலகினர்.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறுகையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் அரசியல் நடவடிக்கைகளில் எங்களுக்கு திருப்தி இல்லை. கட்சியில் உள்ள பொறுப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில்லை என குற்றச்சாட்டை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர். கடந்த மாதம் 7ம் தேதி திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உட்பட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகிய நிலையில் நேற்று இவர்கள் விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* எங்களுக்கு திருப்தி
கோவையில் நாதக மறுசீரமைப்பு கூட்டத்தை நடத்திய சீமானிடம், கட்சியில் அதிருப்தியாளர்கள் விலகி சென்ற நிலையில், தற்போது கட்சியில் உள்ளவர்களை திருப்திபடுத்தவா இந்த மறு சீரமைப்பு கூட்டம் ? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், அதிருப்தியாளர்கள் ஒன்றிணைவது எங்களுக்கு திருப்தி என்றார்.
The post நாதகவில் அடுத்தடுத்து காலியாகும் விக்கெட்டுகள் appeared first on Dinakaran.