×

மோடி ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டு போராடும் காலம் வெகுதொலைவில் இல்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதானி, அம்பானி உள்ளிட்ட ஒருசில கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே ஒன்றிய பாஜ அரசின் பொருளாதார கொள்கை அமைந்திருப்பதை சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இதன்மூலம் மோடி ஆட்சி அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள நோக்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது என குற்றம்சாட்ட விரும்புகிறேன். நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து கூறி வருகிற குற்றச்சாட்டுகளுக்கு, ஆக்ஸ்பார்ம் அறிக்கை, பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி அறிக்கைகள் உறுதி செய்திருக்கிறது. எனவே, 144 கோடி மக்களை ஏமாற்றுகிற மோடி ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்து போராடுகிற காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மோடி ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டு போராடும் காலம் வெகுதொலைவில் இல்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,Tamil ,Nadu ,Congress ,Selvaperunthakai ,Union BJP government ,Adani ,Ambani ,
× RELATED மாநில அரசின் அனுமதியின்றி ஏலம்...