- இபிஎஸ்
- அஇஅதிமுக
- 2026
- தேர்தலில்
- டிடீவி
- தஞ்சாவூர்
- அமமுக
- பொதுச்செயலர்
- தின மலர்
- தமிழ்நாடு அரசு
- யூனியன் அரசு
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- TTV
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புயல் வெள்ள நிவாரணம், பயிர்கள் பாதிப்புக்குள்ளான நிவாரணம் குறைந்த அளவே தமிழக அரசு அறிவித்துள்ளது. மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அரசுக்கு, தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிமுக களஆய்வு கூட்டத்தில் ஏற்பட்டுள்ள சலசலப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். இப்போதுதான் தொண்டர்கள், நிர்வாகிகள் விழித்துள்ளனர். இரட்டை இலை நம்மிடம் தான் உள்ளது, அதிகாரம் நம்மிடம் தான் உள்ளது என தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டு தூக்கத்திலேயே இருந்தால் கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த அதிமுக கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி மூடுவிழா நடத்தி விடுவார். அதானி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. விஜய் குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். இவ்வாறு அவர் கூறினார். டிடிவி.தினகரன் போகிற இடமெல்லாம் 2026 தேர்தலுக்கு பின் எடப்பாடி அதிமுகவுக்கு மூடுவிழா நடத்துவார் என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்லி வருகிறார்.
The post 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு இபிஎஸ் மூடு விழா நடத்துவார்: மீண்டும் மீண்டும் சொல்லும் டிடிவி appeared first on Dinakaran.