×

டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக கள ஆய்வு கூட்டங்களில் அடுத்தடுத்து நிர்வாகிகள் மோதிக் கொண்ட நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 15.12.2024 – ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Adimuka General Committee Meeting ,Edappadi Palanisami ,Chennai ,Akkatsi ,Secretary General ,Adimuka General ,Committee ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி அரைத்த பொய்களையே அரைப்பதாக அமைச்சர் ரகுபதி கண்டனம்!