- 8 வது ஆண்டு நினைவு நாள்
- எடப்பாடி
- ஜெயலலிதா நினைவு
- சென்னை
- உச்ச தலைவர் அலுவலகம்
- ஜெயலலிதா
- பெருமாள் எடப்பாடி பழனிசாமி மலர்
- மெரினா கடற்கரை, சென்னை
சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு நாளான 5.12.2024 (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
தொடர்ந்து, தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்துகின்றனர். அதனையடுத்து, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
The post 8ம் ஆண்டு நினைவு நாள்; டிச.5ல் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை செலுத்துகிறார் appeared first on Dinakaran.