×

ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா

 

கோவை, நவ. 27: கோவை சிவானந்தாகாலனி பகுதியில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மதன் தலைமை வகித்தார். இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம். சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், வனக்காவலர்கள், பட்டு வளர்ச்சித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Pensioners Association ,Coimbatore ,Sivanandakalani ,Tamil Nadu Government All Sector Pensioners Association ,Madan ,Pensioners' Union ,dharna ,
× RELATED கூலி உயர்வு கேட்டு கறிக்கோழி வளர்ப்பு...