×

கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் நுழைவாயில் திறப்பு


சென்னை: கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் வழித்தடத்தில் கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காலை, மாலை நேரங்களில் நுழைவாயில் பகுதி நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. எனவே, பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகளுடன் கூடுதல் நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவாயிலை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

The post கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் நுழைவாயில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Guindy Metro station ,CHENNAI ,Chennai Airport ,Wimco Nagar route ,
× RELATED விமான தாமதம், ரத்து ஆவதற்கு...