×

வணிக கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி: 29-ல் கடையடைப்பு போராட்டம்

சென்னை: வணிக கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் 29-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. வணிக கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். ரூ.20,000 வாடகை செலுத்துபவர்கள், மாதம் ரூ.3,200 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வணிக கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டியை திரும்பப் பெறக் கோரி கடையடைப்பு போராட்டம் நடத்த வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

 

The post வணிக கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி: 29-ல் கடையடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Foodstuffs ,All Merchants Association ,Dinakaran ,
× RELATED வணிக கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூல்:...