×

முதுகலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

 

திருத்துறைப்பூண்டி, நவ. 26: கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான 11 மற்றும் 12ம் வகுப்பு பாடம் கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் பயிற்சி முகாம் பள்ளி வளாகத்தில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசுகையில், இப்பயிற்சி முகாமின் வாயிலாக பாடத்திட்டத்தின் புதுமைகள், மாதிரி வகுப்புகள், கற்றல் துணைக் கருவிகள் பயன்படுத்தும் உத்திகள் குறித்து கருத்தாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக குறிப்பிட்டார்.

நிறைவாக மாணவர்கள் அடைய வேண்டிய கற்றல் திறன் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், இந்த முகாமில் உடல் நலம் மற்றும் நல்வாழ்வு சார்ந்த மாணவர்களிடம் உள்ள நிலைகள் குறித்து அறிதல், வகுப்பறை மேலாண்மை, புதிய கற்பித்தல் உத்திகள் சார்ந்த பயிற்சி அளிக்க இருப்பதாக குறிப்பிட்டார். முகாமின் கருத்தாளராக ஆசிரியர்கள் முகுந்தன், பாலாஜி,சித்ரா ஆகியோர் செயல்பட்டனர்.

The post முதுகலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Thiruthurapoondi ,Tiruvarur District Teacher Education and Training Institute ,Katimedu Government Higher Secondary School ,Dinakaran ,
× RELATED போதை பொருட்கள் எதுவும்...