தஞ்சாவூர், நவ. 26: பட்டுக்கோட்டையில் இன்று நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டை, வட்டார சேவை மையத்தில் இன்று (26.11.2024) நடைபெறவிருந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் மற்றும் தனித்துவ அடையாள அட்டைகள் (UDID) இணையதளம் வாயிலாக வழங்கும் சிறப்பு முகாம் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
The post பட்டுக்கோட்டையில் இன்று நடக்க இருந்த மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.