×

வலையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும்

 

புதுக்கோட்டை,நவ.26: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வலையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென பெற்றோர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள வலையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் போதுமான கட்டட வசதி இல்லாததால் மாணவ மாணவிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாகவும், பாதுகாப்பற்ற முறையில் அந்த பள்ளியில் குழந்தைகள் பயின்று வரும் சூழலில் புதிய வகுப்பறை கட்டடம் மற்றும் சுற்றுச் சுவர் அமைத்து தர வேண்டும். அந்த கிராமத்தை சேர்ந்த பெற்றோர்கள் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்: பள்ளிக்கு கட்டட வசதி மற்றும் இட வசதி இல்லாததால் பாம்பு பூச்சிகள் பள்ளிக்குள் புகுந்து விடுவதாகவும் மழைக்காலத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

The post வலையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Velayapatti Panchayat Union Primary School ,Pudukottai ,Arimalam Panchayat Union of Pudukottai District ,Pudukottai District Arimalam ,Nelayapatti Panchayat Union Primary School ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே தனியார் பள்ளி வாகன விபத்து: 25 மாணவர்கள் காயம்