×

அரசு பள்ளியில் தூய்மை பணி

ராமேஸ்வரம்,நவ.26: தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பணி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலகின் மிகப்பெரிய இளைஞர் அமைப்பாக விளங்கும் என்சிசி அமைப்பு 1948ம் ஆண்டு நவ.24ம் தேதி உருவாக்கப்பட்டது. அதன் 76வது ஆண்டுவிழா நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் மேலாண்மை குழு துணை தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ஜெயக்காந்தன், பழனிச்சாமி ஜேம்ஸ் ஆனந்தன், சுசிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மாணவர் படை மாணவர்கள் பள்ளி மைதானத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

The post அரசு பள்ளியில் தூய்மை பணி appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,National Student Force Day ,Rameswaram Government Men's Secondary School ,NCC ,Dinakaran ,
× RELATED ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறப்பு?