சென்னை: தமிழகத்தின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். மார்ச் 31,2024 நிலவரப்படி, சென்னை பல்கலை அனைத்து மாவட்டங்களிலும் 72 கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் துறைகள், 22 ஆராய்ச்சி மையங்கள் மற்றும் 138 இணைப்புக் கல்லூரிகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், நிறுவனங்களின் நிதி அம்சங்களைத் தவிர ஆசிரியர் உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட தற்போதைய நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள அதன் இணைப்புக் கல்லூரிகள், ஆராய்ச்சி துறைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இணைப்பு கல்லூரிகளில் இருந்து சேரிக்கப்படும் விவரங்கள் மதிப்பாய்வு செய்யப்படும். சென்னை பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்களைப் பெற இந்த ஆய்வு உதவும். ஆசிரிய உறுப்பினர்கள் நியமனம் மற்றும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள கல்லூரிகளில் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று பல்கலைக்கழக வட்டாரம் தகவல்கள் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழகம் அதன் இணைப்புக் கல்லூரிகளைச் சேர்த்துள்ளது. மேலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மேம்பாடுகளைச் செய்யவும் மதிப்பீடுகள் உதவும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post ஆசிரியர், மாணவர் தேர்ச்சி குறித்து இணைப்புக் கல்லூரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்: சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு appeared first on Dinakaran.