- பெர்யார்
- பேராயர்
- அண்ணா
- துணை முதலமைச்சர்
- உதயானிதி ஸ்டாலின்
- முத்தம் கலைஞர் நினைவு
- சென்னை
- உதயநிதி ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- திராவிதா
- பெரியார்
சென்னை : தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று (நவம்பர் 27) பிறந்தநாள் கண்டிருக்கிறார். இதையடுத்து, சென்னை முகாம் அலுவலகத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.அதன் தொடர்ச்சியாக திராவிட இயக்கத்தின் தூண்களாகவும், சமூக நீதி பாதைக்கு வித்திட்டவர்களாகவும் இருந்து, தங்களது வாழ்நாளை பொதுவாழ்விற்காக அர்ப்பணித்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று, நேரில் மரியாதை செலுத்தினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மரியாதை செலுத்திய பிறகு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனிடையே தலைவர்களுக்கு மரியாதை செலுத்திய பிறகு, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
ட்வீட் 1 : ‘உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் – அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் கழகத்தலைவர் – முதலமைச்சர் அவர்களிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டோம். எந்நாளும் வழிநடத்தும் தாய் – தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
ட்வீட் 2: தமிழ்நாட்டின் உரிமைகள் காக்க ஓய்வெடுக்காமல் உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஓய்வு கொண்டிருக்கும் அவரது நினைவிடத்தில், பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினோம். தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக என்றும் அயராது உழைப்பதற்கான உத்வேகத்தையும் – ஊக்கத்தையும் கலைஞர் நினைவிடத்தில் பெற்று வந்தோம்.
ட்வீட் 3 : மிட்டா மிராசுகள் வீட்டு முற்றத்தில் இருந்த அரசியலை, பாமர மக்கள் வசிக்கும் வீதிகளில் கொண்டு வந்து நிறுத்திய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவிடத்தில், நம் பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினோம். எத்தகைய சூழலிலும் மக்களை நேசிக்கின்ற உன்னத அரசியலை எந்நாளும் முன்னெடுக்க அண்ணா நினைவிடத்தில் உறுதியேற்றோம்.
ட்வீட் 4 : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பர் – கழகத்தலைவரின் அன்புக்குரிய கொள்கை வழிகாட்டி. தமிழ்மொழிப் பற்றோடு சுயமரியாதை உணர்வையும் மேடைகள்தோறும் இடைவிடாது ஊட்டிய கொள்கை முழக்கம். நம் இனமானப் பேராசிரியர் தாத்தா அவர்களின் இல்லத்தில் நம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தோம். அவர்களின் குடும்பத்தாரின் வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தோம்!
The post தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை! appeared first on Dinakaran.