- ஆதி திராவிடன்
- கரூர் மாவட்டம்
- தாட்கோ கரூர்
- மாவட்ட கலெக்டர்
- தங்கவேல்
- அரவக்குறிச்சி
- நஞ்சைக்களக்குறிச்சி, கரூர் மாவட்டம்
- தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம்
- Tadco
- ஆதி
- தின மலர்
*தாட்கோ மூலம் வழங்கப்பட்டது
கரூர் : கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் நஞ்சைக்காளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் தங்கவேல், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் நண்ணிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களிடம் நிறைந்தது மனம் என்ற நிகழ்ச்சி மூலம் நேரடியாக அவர்களுடைய இடத்திற்கு சென்று கருத்துக்களை கேட்டறிந்தார்.
இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர், ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழ்மையிலும், ஏழ்மையான மக்கள் மற்றும் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஆதி திராவிடர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) துறையின் மூலம் பல்வேறு பொருளாதார மேம்பாடு திட்டங்களை மானியத்துடன் வங்கி கடன் வழங்கி அவர்களின் பொருளாதார வாழ்வினை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
முதல்வரின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், நண்ணிலம் மகளிர் நில உடமை திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி திட்டம், கல்வி கடன் திட்டம், தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மற்றும் குதிரை வண்ணார் நல வாரியத்தின் திட்ட உதவிகள், துரித மின் இணைப்பு திட்டம் மற்றும் பழங்குடியினர் நல வாரியம் மற்றும் நரிக்குறவர் நல வாரியத்தின் திட்ட உதவிகள் என பல்வேறு திட்டங்கள் மூலம் ஆதி திராவிடர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 506 ஆதி திராவிடர் பயனாளிகளுக்கு ரூ. 12.39 கோடி மதிப்பில் ரூ. 3.47 கோடி மானியமாக வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி திட்டத்தின் மூலமாக 73 ஆதி திராவிடர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 6.38 கோடி மதிப்பில் ரூ. 3.19 கோடி வங்கி கடன் மானியமாகவும், நண்ணிலம் மகளி£ நில உடமை திட்டத்தின் கீழ் 16 மகளிர்களுக்கு ரூ. 1.72 கோடி மதிப்பில் ரூ. 78.55 லட்சம் மானியத்தில் 12.56 ஏக்கர் விலை நிலங்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சரின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 4 ஆதி திராவிடர் பயனாளிகளுக்கு ரூ. 24.31 லட்சம் மதிப்பில் ரூ. 10.53 லட்சம் பொருளாதார கடன் மானியமாகவும், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலமாக 52 ஆதி திராவிடர் பயனாளிகளுக்கு ரூ 52லட்சம் மானியமாகவும் என மொத்தம் கடந்த 3 ஆண்டுகளில் 651 ஆதி திராவிடர் பயனாளிகள் ரூ. 21.25 கோடி மதிப்பில் ரூ. 7,82 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்த திட்டத்தின் முலம் பயன்பெற்றவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post கரூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 651 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.7,82 கோடி மானியம் appeared first on Dinakaran.