×
Saravana Stores

கேரட் பயிரை நோய் தாக்காமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு பணியில் விவசாயிகள் மும்முரம்

ஊட்டி : ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் மாறுபட்ட காலநிலை நிலவும் நிலையில், கேரட் பயிர்களை நோய் தாக்காமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்க்கொள்ளப்படுகிறது.

உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகள் பயிரிடப்பட்டாலும், தற்போது உருளைக்கிழங்கு மற்றும் கேரட் அதிகளவு பயிரிப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ளது.

சில இடங்களில் அறுவடைக்கு ஒரு மாத கால இடைவெளி உள்ளது. தற்போது ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி கொட்டி வருகிறது. இதனால், கேரட் பயிர்களை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், காலநிலை அடிக்கடி மாறுபட்டல் பல்வேறு நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்கி பயிரை நாசம் செய்துவிடும். இதனால், தற்போது கேரட் பயிர்களை நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்காமல் இருக்க பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

The post கேரட் பயிரை நோய் தாக்காமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு பணியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை கலெக்டர் ஆய்வு