×

அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகள் கூட்டம்: செயலாளர் காசிமுத்து மாணிக்கம் அறிவிப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. திமுக வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அமைப்பாளர்கள் கூட்டம் 25ம் தேதி (நாளை) காலை 11 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் எனது தலைமையில் நடக்கிறது.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள், அமைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் துணை முதல்வர், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள், திமுக ஆக்கப் பணிகள் பொருள் குறித்து விவாதிக்கப்படும்.

The post அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகள் கூட்டம்: செயலாளர் காசிமுத்து மாணிக்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Anna ,Timuka Trader ,Kashimuthu Manikam ,Chennai ,Dimuka Trader ,Anna Vidyalaya, Chennai ,Poet ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...