×

நிதிநிறுவன ஏஜெண்ட் கைது

 

விழுப்புரம், நவ. 23: விழுப்புரம் அடுத்த சித்தாத்தூர்திருக்கை கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஷால்(23). இவர் விழுப்புரத்தில் பிரபல தனியார் நிதிநிறுவனத்தில் கலெக்‌ஷன் ஏஜென்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மரகதபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார்(30) கடந்த ஒருவருடத்துக்கு முன் அந்த நிதிநிறுவனத்தில் ரூ.1 லட்சம் கடனாக பெற்று அதில் ரூ.12 ஆயிரம் பணம் மட்டும் கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கலெக்‌ஷன் ஏஜென்ட் விஷால் முத்துகுமாரின் வீட்டின் முன்பு நின்று கொண்டு திருப்பி கட்டுமாறு பிரச்னை செய்ததாக தெரிகிறது. அதனை தடுக்க வந்த முத்துகுமாரின் தாய் பூங்கோதை(48) என்பவரை விஷால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விஷால் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

The post நிதிநிறுவன ஏஜெண்ட் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Kaliamurthy ,Vishal ,Chittathurthirukai village ,Murugan ,Muthukumar ,Marakathapuram ,
× RELATED தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட...