×

கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறையினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ. 23: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில், மதுரை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாநில தலைவர் வைரவன், துணை தலைவர் பரமேஸ்வரன், மாநில நிர்வாகிகள் ஹபிப்பத்துல்லா, அருணாசலம், பிச்சை, தமிழ்நாடு சுகாதார போக்குவரத்துறை ஊழியர் சங்க முன்னாள் தலைவர் நடராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொதுசெயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன்,

இணை செயலாளர் கல்யாண சுந்தரம், முன்னாள் தலைவர் சுப்ரமணியன், தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில துணைதலைவர் மாரியப்பன், டான்சாக் மண்டல தலைவர் வீரவேல்பாண்டியன், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயலாளர் பிரேமா ஆனந்தி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, கடந்த அக்.,23ல் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்பட கருத்தியலான ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறையினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu Highway Department Road Maintenance Staff Association ,Madurai District Highway Department ,Vairavan ,vice president ,Parameswaran ,Habipatullah ,Arunachalam ,Pichai ,Tamil Nadu ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு