- கண்ணூர்
- திருவனந்தபுரம்
- ராஜேஷ்
- கண்ணூர் கொழும்பு, கேர
- திவ்யஸ்ரீ
- குசராகோட் மாவட்டம்
- சந்திர காவல் நிலையம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் கொழும்மல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40). இவரது மனைவி திவ்யஸ்ரீ (35). காசர்கோடு மாவட்டம் சந்தேரா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு 7ம் வகுப்பில் படிக்கும் ஒரு மகன் உண்டு. இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து திவ்யஸ்ரீ விவாகரத்து கோரி கண்ணூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த சில மாதங்களாக திவ்யஸ்ரீ தனது மகனுடன் அருகில் கரிவெள்ளூர் பகுதியிலுள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்த பிறகு திவ்யஸ்ரீ வீட்டுக்கு திரும்பினார்.
இந்தநிலையில் அன்று மாலை மனைவியின் வீட்டுக்குள் புகுந்த ராஜேஷ் திவ்யஸ்ரீயை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இதை தடுக்க வந்த திவ்யஸ்ரீயின் தந்தை வாசுவையும் வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அந்த பகுதியினர் மீட்டு பையனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திவ்யஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இது குறித்து வளபட்டணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.தப்பி ஓடிய ராஜேஷ் அங்குள்ள ஒரு பாரில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று ராஜேசை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.
The post கண்ணூர் அருகே பெண் போலீஸ் வெட்டிக்கொலை: தப்பிய ஓடிய கணவன் கைது appeared first on Dinakaran.