×
Saravana Stores

செங்குன்றத்தில் பரபரப்பு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

புழல்: செங்குன்றத்தில் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் பைபாஸ் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த, வங்கியில் நேற்று முன்தினம் நள்ளிரவில், மர்ம நபர் ஒருவர் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே குதித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, வங்கியின் அலாரம் அடித்ததால், இதுகுறித்து வங்கி மேலாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்குன்றம் குற்றப்பிரிவு போலீசார், வங்கியின் உள்ளே இருந்த கொள்ளையனை கைது செய்து, செங்குன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், ஆவடி அடுத்த வீராபுரம், ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்(45) என்பதும், வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேறு எங்கெல்லாம் சுரேஷ் கைவரிசை காட்டி உள்ளார்? பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் அலாரம் அடித்து உடனே போலீசார் வந்து கொள்ளையனை பிடித்ததால், பல கோடி பணம் தப்பியது. கைது செய்யப்பட்ட சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

The post செங்குன்றத்தில் பரபரப்பு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Indian ,Overseas Bank ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ்...