அண்ணாநகர்: தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சுபிதா (46). இவர், தனது அக்கா மகனுக்கு ஆபரேஷன் செய்வதற்கு 3 லட்சம் ரூபாய் தேவைப்பட்டதால் நேற்று முன்தினம் தாம்பரம் பகுதியில் உள்ள வங்கியில் பணத்தை எடுத்துள்ளார். பின்னர், தனது அண்ணன் லூர்து ராஜ் (50) என்பவருடன் ஆட்டோவில் தாம்பரத்தில் இருந்து அமைந்தகரைக்கு சென்று ெகாண்டிருந்தார். வழியில், ஒரு ஓட்டலில் சாப்பாடு வாங்க சுபிதா சென்றுள்ளார். லூர்துராஜ் ஆட்டோவில் அமர்ந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த இருவர், ஆட்டோ பின்னால் 500 ரூபாய் நோட்டு கிடக்கிறது, உங்களுடையதா என கேட்டுள்ளனர். உடனே, லூர்துராஜ் ஆட்டோவில் இருந்து இறங்கி பணத்தை எடுத்து கொண்டு மீண்டும் ஆட்டோவிற்கு திரும்பியபோது பணப்பை மாயமானது தெரிந்தது. இதுகுறித்து சுபிதா, அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post ரூபாய் நோட்டை சிதறவிட்டு ஆட்டோவில் இருந்த ₹3 லட்சம் அபேஸ் appeared first on Dinakaran.