×

போலி சான்றிதழ் கொடுத்த 6 என்ஆர்ஐ மாணவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை ரத்து

சென்னை: வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் நடப்பாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 6 பேரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருகிறது. முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாணவர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாறு ஆய்வு மேற்கொண்டதில், மருத்துவப்படிப்பில் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த 6 பேரின் தூதரக சான்றிதழ்கள் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

இதில், 3 பேர் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடங்களை பெற்றுள்ளனர். போலி தூதரக சான்றிதழ் சமர்பித்ததற்காக அந்த 3 மாணவர்களின் இடங்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், 6 பேரும் இனி மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள 3 எம்.பி.பி.எஸ் இடங்கள் வரும் 25ம் தேதி தொடங்கும் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் சேர்க்கப்படும். போலி சான்றிதழ் வழங்கியவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post போலி சான்றிதழ் கொடுத்த 6 என்ஆர்ஐ மாணவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை ரத்து appeared first on Dinakaran.

Tags : NRI ,MBBS ,CHENNAI ,MPBS ,Tamil Nadu ,Directorate of Medical Education ,Medical Education Admissions Committee ,
× RELATED மாநில மருத்துவக் கல்வி மேலாண்மை...